ஜெயக்குமார் ஆடியோ விவகாரத்தில் புதிய திருப்பம்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (15:14 IST)
ஜெயக்குமார் ஆடியோ விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சிந்து மற்றும் அவரது தாயார் சாந்தி மீது சந்தோஷ்குமார் என்பவர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார், தன்னிடம் சிபாரிசுக்கு வந்த பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியதால் அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளதாகவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் ஜெயக்குமாரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இதுசம்மந்தமாக சம்மந்தப்பட்ட பெண்ணின் தாயோடு ஜெயக்குமார் பேசுவது போன்ற ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது., இந்த புகாரை மறுத்த ஜெயக்குமார். ஆடியோவை மார்பிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ சம்மந்தமாக இது டிடிவி தினகரனின் சதி என்றும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சையின் திடீர் திருப்பமாக இப்போது பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிந்து மற்றும் அவரது தாயார் சாந்தி மீது சந்தோஷ்குமார எனும் இளைஞர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ‘சாந்தி மற்றும் அவரது மகள் சிந்து ஆகியோர் சாந்தியின் இதய ஆப்ரேஷனுக்காக என்னிடம் ரூபாய் ஐந்து லட்சம் வாங்கிக்கொடு திரும்பித்தராமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும் சிந்துவும் தானும் காதலித்தாகவும் கூறியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே சாந்தி மற்றும் சிந்து மீது  வங்கி மேலாளர் ஒருவர் வீடு வாடகைக்கு விடுதல் சம்மந்தமாக 2014 ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்