ரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது? கருணாஸ் ஆவேசம்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (14:20 IST)
நகைச்சுவை நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், தனது தொகுதி மக்களுக்கு எந்த ஒரு சலுகைகளையும் செய்திடாமல் எம்.எல்.ஏ.வாக இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். 
 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பின்வருமாறு பேசினார். என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்திடாத அரசில் எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர நான் விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக ஆனது அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று அரசுக்கு கொடுப்பதற்காக அல்ல. ஊதியத்துக்காக நான் எம்.எல்.ஏ.வாகவில்லை. 
 
இதுவரை சபாநாயகரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் சமுதாயத்திற்காக எப்போது வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். 
 
தற்போதைய தமிழக அரசு, மக்களுக்கான அரசாக இல்லை. சுயநலமான அரசாகவும், தங்களது உறவினர்களுக்கு சலுகை செய்யும் அரசாக உள்ளது. தமிழக அரசிடமிருந்து எனக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எம்.எல்.ஏ.வுக்கு அரசு வழங்கும் ரூ.1 லட்சம்  சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிப்பது? என ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்