ஆனாலும் வழக்கம்போல குடும்பத்தில் தகராறுகள் வந்து கொண்டுதான் இருந்துள்ளன. அதேப்போல இரு தினங்களுக்கு முன்னால் சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனை முற்றவே இருவரும் விஷம் குடித்து சாகப்போவதாக ஒருவரை ஒருவர் மிரட்டி உள்ளனர். உறவினர்களும் வழக்கம் போல சாதாரண பிரச்சனைதான் என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
ஆனால் சொன்னபடியே மாமியார் சாந்தி நள்ளிரவில் விஷத்தைக் குடித்து வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிச்சோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தன்னால் தான் மாமியார் விஷமருந்து இறந்துவிட்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டுவார்கள் என பயந்து தானும் எலி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.