வன உயிர் தொடர்பான குற்றங்களை தடுக்க புதிய பிரிவு! – ஒரு வாட்ஸப் செய்தால் போதும்!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:20 IST)
தமிழ்நாட்டில் வன உயிர்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்தலை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.



தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வன உயிர்களாக அறிவிக்கப்பட்ட பல பறவைகள் மற்றும் விலங்கினங்களை பலர் பணத்திற்காக வேட்டையாடுவதும், பிடித்து விற்பனை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்று வன உயிர்கள் தொடர்பாக நடைபெறும் குற்றங்களை தடுக்க தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, பச்சைக் கிளிகள் பாதுகாக்கப்பட்ட வன உயிர்கள் பட்டியலில் உள்ளது. அவற்றை வீடுகளில் வளர்க்கவும் தடை உள்ளது. மக்களுக்கு தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில்தான் புதிதாக TNFWCCB (Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureu) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இந்த புதிய அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். வன உயிர் தொடர்பான குற்றங்களை கண்டறியவும், வன உயிர்களை பாதுகாக்கவும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வன உயிர்கள் தொடர்பான குற்றங்களை இந்த அமைப்புக்கு தெரியப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1800 599 7699 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். 94453 24153 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அல்லது tnfwccb@gmail.com என்ற இ-மெயிலிலும் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்