2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரயில்களில் அனுமதி!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (13:05 IST)
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு ரயில்வே. 

 
ஆம், சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஜனவரி 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு... 
 
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
 
2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
 
மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். 
 
முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
 
UTS செயலில் வழியாக ஜனவரி 31 ஆம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவோர் முன்பதிவு செய்ய முடியாது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்