ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு,பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிவித்து காவிரி தாயை வழிபட்டனர்!

J.Durai
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:09 IST)
ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய விழாவாக மட்டுமல்லாமல் காவிரி தாயை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
பெண்கள் மட்டும் வழிபடும் விழாவான ஆடிப்பெருக்கு விழா டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகளில்  கொண்டாடபடுகிறது.
 
கல்லனை கால்வாய் ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கரை புரண்டு ஓடுவதால்  படித்துறையில் ஏராளமானவர்கள் குவிந்து உள்ளனர்.
 
பழங்கள், காதோலைகருகமணி,மஞ்சள் கயிறு மற்றும் புதுமண தம்பதிகள் திருமண  நாளில் அணிந்து இருந்த மாலை, தாலி ஆகியவற்றை வைத்து பூஜை செய்து சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.
 
பின்னர் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில்.மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.
 
தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்புக்கு ஏராளமான காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
 
இவர்களுடன் தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்