தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்பு

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (08:17 IST)
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என் ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். 
 
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். எனவே, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள இவர் நாகாலாந்து மாநில கவர்னராக இருந்தவர். 
 
இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவியேற்க உள்ளார். ஆம், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 
 
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்