பத்தாம் வகுப்பு தேர்வில் நெல்லை மாவட்டம் 94.19% தேர்ச்சி!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (10:42 IST)
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 4,207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினார். இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 
 
நெல்லை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 11,126 மாணவர்கள்,11,274 மாணவிகள் என 22,400 பேர்  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,156 மாணவர்கள், 10,942 மாணவிகள் என மொத்தம் 21,098 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
கடந்த ஆண்டு 29 ஆவது இடத்தில் இருந்து நெல்லை மாவட்டம் தற்போது 20 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில்  உள்ளது. அதன்படி  மாணவர்கள் 91.28% , % மாணவிகள் 97.06 , % சதவீதம் தெர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்