நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!

புதன், 29 மார்ச் 2023 (14:50 IST)
திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பற்களை போலீஸ் அதிகாரிகள் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்மை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை, விசாரணையின்போது, அவர்களின் பற்களைப் பிடுங்கியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் விசாரணை கைதியின் பற்களை பிடுங்கியதாக கூறப்படும்  அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் அளித்த போது ‘விசாரணை கைதிகளின் பற்களை படுங்கி விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தார்.

மேலும் ‘இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது ’ என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதை விசாரிக்க, சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று சேரன்மாதேவி  உதவி ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரானபின் சூர்யா கூறியதாவது:

‘’போலீஸாரால் தாக்கப்படவில்லை; நான் கீழே விழுந்ததில் பற்கள் உடைந்துவிட்டது. என் பற்கள் உடைந்ததற்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை’' என்று கூறியுள்ளார்.

எனவே, திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பற்களை போலீஸ் அதிகாரிகள் பிடுங்கியதாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்