பட்டாதான் புரியும்: நெல்லை விபத்தை தொடர்ந்து நாமக்கல் கல்குவாரிக்கு சீல்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:42 IST)
குமாரபாளையம் அருகே அனுமதியின்றி கடந்த 6 வருடங்களாக இயங்கி வந்த கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

 
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அனுமதியின்றி கடந்த 6 வருடங்களாக இயங்கி வந்த கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் புகாரின் பேரில் அங்கு செயல்பட்டு வந்த டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
 
மேலும் அங்கு பணிபுரிந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு தலைமறைவான குவாரி உரிமையாளர் சண்முகத்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்