நூல் விலை உயர்வு; மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

புதன், 18 மே 2022 (09:41 IST)
நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கிறது.

பின்னலாடை உற்பத்திக்கு மூலப்பொருளான நூலின் விலை கட்டுக்கடங்காத அளவு விலை உயர்ந்துள்ளது பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதலாக கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை நிறுவனங்கள், தொழிலாளர்கள் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நூல் விலை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அமைச்சர்கள் பேச உள்ளனர். இந்நிலையில் இன்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்