எல்லாம் பறவைக்காய்ச்சல் எஃபெக்டு! – கிடுகிடுவென குறைந்த முட்டை விலை!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (08:18 IST)
இந்தியா முழுவதும் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவ தொடங்கியுள்ள காரணத்தால் முட்டை விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கேரளாவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளிடம் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சல் தொற்று தற்போது வடமாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பறவைக்காய்ச்சலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவிலான கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறவை காய்ச்சல் காரணங்களால் கறிக்கோழி மற்றும் முட்டை விலை வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியுள்ளன. இன்றைய நிலவரப்படி நாமக்கலில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ.4.85 ஆக விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்