3 ஆண்டுகளாக சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் போக்குவரத்துத் துறை

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (12:43 IST)
சென்னை மாநகர போக்குவரத்துப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இ.எல் சம்பளம் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 
தமிழக போக்குவரத்துக் கழகம் பெட்ரோல் டீசல் விலையுயர்வு நிதி நெருக்கடி போன்ற பல காரணங்களைக் கூறி கடந்த ஆண்டு பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இதனால் வருவாய் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சென்னைப் போக்குவரத்து கழகத்தைப் பொறுத்தவரை வருமானம் பெரிதாக அதிகரிக்கவில்லை. அதனை ஊக்குவிக்க தற்போது பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 
கடுமையான நிதிநெருக்கடியைக் காரணம் காட்டி போக்குவரத்துத் துறை பணியாளர்களின் பல்வேறு சலுகைகளைப் பறித்து வருகிறது. தொழிலாளர் சட்ட விதிகளின் படி 15 நாட்கள் இ.எல். எனப்படும் ஈடு செய்யப்படும் விடுப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உபயோகிக்காத தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கும் அவர்களின் ஒவ்வொரு நாள் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக  சென்னை போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு இந்த சம்பளம் அளிக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்