காதலுக்காகக் குழந்தையைக் கொலை செய்த தாய் – வேலூரில் நிகழ்ந்த அதர்மம் !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (15:16 IST)
வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையைத் தாயேக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரனுக்கும் அவரது மனைவி காவ்யா இடையில் தகராறு ஏற்பட்டதால் இருவரும் சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது  ஒரே மகன் தாய் காவ்யாவோடு வாழ்ந்து வருகிறான்.

இந்நிலையில் காவ்யாவுக்கு தியாகராஜன் எனபவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமனமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால் நாளாக நாளாக தியாகராஜனுக்கு காவ்யாவின் மகன் அவர்களோடு வாழ்வது இடைஞ்சலாக இருந்துள்ளது. இதனால் இருவரும் இணைந்து மகனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி ஒரு நாள் இரவு அந்த சிறு குழந்தையை தண்ணீரில் முக்கிக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி ஆற்றுப்பாலத்தின் அடியில் வைத்துப் புதைத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் கேட்டபோது குழந்தைத் காவ்யாவின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளதாக சொல்லி ஏமாற்றியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக காவ்யாவைப் பார்க்க அவர் தாய் வந்த போது குழந்தைப் பற்றி விசாரித்துள்ளார். அப்போது வேறு வழியில்லாமல் காவ்யா தனது குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து காவ்யாவின் தாயார் போலிஸில் புகார் அளிக்க காவ்யாவையும் அவரது இரண்டாவது கணவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்