பின்னர் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, இறந்துகிடந்தவர் வலசைப்பட்டி கிராமத்தில் வசித்துவந்த முருகையா (40). அவர் கொத்தனாராக அவர் அங்கு வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி புழுதிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், முருகையாவின் மனைவி மேகலைக்கும் (36) முருகையாவின் தம்பி பிச்சமணிக்கும் (34) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் முருகையாவுக்குத் தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடித் தகராறு எழுந்தது.
இதனையடுத்து முருகையா உயிருடன் இருந்தால் நாம் கள்ளக்காதலை தொடரமுடியாது என்று எண்ணி, மணிமேகலையும், பிச்சமணியும் திட்டம் தீட்டி முருகையாவை பிச்சமணி கழுத்து நெறித்து கொன்றதாகத் தெரிகிறது. பிறகு இருவருமாகச் சேர்ந்து முருகையாவின் உடலை பாலத்தின் அடியில் போட்டுவிட்டுள்ளனர்.