மதுபோதையில் அதிவேகம்.. பைக் மோதி தாய், சேய் பலி! – சென்னையில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (10:52 IST)
சென்னையில் மதுபோதையில் வேகமாக பைக் ஓட்டி வந்தவரால் தாய். சேய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களிடையே அதிவேக பைக்குகள் பிரபலமாக உள்ள அதேசமயம் அதனால் ஏற்படும் விபத்துகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்று சென்னையில் அண்ணாநகரில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்துள்ளார். உடன் ஒரு பெண்ணும் பயணித்துள்ளார்.

ALSO READ: நாங்க சொன்னத செய்யல.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியம் நிறுத்தம்! – அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிறுவனங்கள்!

அதிகாலை 3 மணியளவில் அண்ணா நகரில் பூங்குழலி என்ற பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த அந்த பைக் மோதியதில் பூங்குழலியும் அவரது கை குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் வேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இளைஞர்கள் இதுபோல மது அருந்திவிட்டு அதிவேகமாக பைக் ஓட்டுவது குறித்து சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்