குறிப்பிட்ட மதத்தை டார்கெட் செய்வதா? குஷ்பூ காட்டம்!!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (16:57 IST)
குறிப்பிட்ட மதத்தினர் தான் கொரோனா பரவலுக்கு காரணம் என கூறுவதை எதிர்த்து குஷ்பூ டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்று சமூக தளங்களில் சிலர் பதிவிட சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை பதிவுகளுக்கு நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரருமான குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். 
 
அவர் பதிவிட்டதவாது, கொரோனா வைரஸ் பரவலை விட இப்போது மிகவும் பயங்கரமான விஷயம் என்னவென்றால், சில முட்டாள்கள் அதை வகுப்புவாதமாக்குகிறார்கள். முட்டாள்களே, இந்த வைரஸுக்கு எந்த மதமும் இல்லை, எந்த மதத்தையும் பார்க்கவில்லை, கடவுளுக்கு அஞ்சவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டிலேயே இருங்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
 
மேலும் இதற்கு முன்னரே மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, சிறுபான்மை சமூகத்தைக் குறிவைத்து வெறுப்பு பரப்புரை தொடங்கப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்