கொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்

புதன், 1 ஏப்ரல் 2020 (15:05 IST)
கொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக மக்கள் தினமும் வெளியே வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
 
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்மறி மார்க்கெட்டில் அம்மாவட்ட விஜய கார்த்திகேயன் அவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியோடு கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த சுரங்கத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் அதனால் அவர்கள் உடலில் கிருமிகள் இருந்தால் அழிக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த கிருமி நாசினி சுரங்கம்செயல்படும் விதத்தை கலெக்டர் விஜய கார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இந்த சுரங்கம் செயல்படும் விதம் குறித்து ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார். சிறிய துகள்களைப்போல இந்தக் கிருமி நாசினிகள் சுரங்கத்துக்குள் தெளிக்கப்படுவதாகவும், மக்கள் உள்ளே சென்று வெளியேறும்போது உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும் என்றும், இந்த கிருமி நாசினியால் மக்களுக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்றும் பாதுகாப்பான முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பூர் கலெக்டரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

We have set up a first of it's kind #disinfection tunnel in Thennampalayam market in #Tiruppur where people will have to walk through the disinfection tunnel for 3-5secs after handwash,before entering the market ! Thanks to #YI #CII #TiruppurCoronaFighters for support ! pic.twitter.com/D0hWWqjBnl

— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 1, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்