தூய்மை பணியாளர்களை மலர்களால் குளிப்பாட்டிய பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (16:32 IST)
கொரோனா வைரசுக்கு எதிராக இரவு பகலாக போராடிவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல்துறையின் ஆகியோர்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல தூய்மைப் பணியாளர்கள் என்பது குறித்து செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இருப்பினும் அவர்கள் தங்களது பணிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற அதிருப்தியை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள்
 
இந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நேஹா என்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூய்மைப் பணியாளர் தனது வண்டியுடன் குப்பையை சேகரிக்க வந்த போது அவர்கள் மீது மலர்களைத் தூவி அவர்களை மலர்களால் குளிப்பாட்டி ஆச்சரியப்படுத்தினார். ஒரு சிலர் அதற்கும் மேலே போய் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனால் அந்த தூய்மை பணியாளர்கள் இன்ப அதிர்ச்சியில் மிதந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்த வீடியோ ஒன்றை பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர்சிங் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த பொதுமக்களை தான் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் காவல்துறையினருக்கு கொடுக்கும் மரியாதையை தூய்மைப் பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்