தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் முழுவதும் ஜனவரி 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேற்கண்ட 12 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.