8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Mahendran

ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (16:50 IST)
வங்கதேசத்தை சேர்ந்த 8 பிரஜைகள் சட்டவிரோதமாக குடியிருந்த நிலையில், அவர்களை நாடு கடத்தி விட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வங்கதேசத்தை சேர்ந்த 8 பிரஜைகள் அங்கீகரிக்கப்படாத வழியில் இந்தியாவிற்குள் நுழைந்து, டெல்லியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, வங்கதேசம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜஹாங்கீர் மற்றும் அவரது மனைவி, ஆறு குழந்தைகள் ஆகிய எட்டு பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுடைய வங்கதேச அடையாளங்களை அழித்து, டெல்லியில் போலி ஆவணங்களுடன் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறிய அவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டனர். விசாரணையின் போது, அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டனர்.

வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன், நாடு கடத்தல் செயல்முறை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்