இன்று காலை 10 மணி வரை எத்தனை மாவட்டங்களில் மழை? வானிலை ஆய்வு மையம்..!

Siva

ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (08:17 IST)
இன்று 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, ஆந்திரா பக்கம் சென்று மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பிய நிலையில், இந்த மாத இறுதிவரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெரிய அளவில் இல்லை என்றாலும், இனிவரும் நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை தொடர்பாக, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னைக்கு கிட்டத்தட்ட மழை முடிந்து விட்டதாகவும், இனி பெரிய அளவில் மழை இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2 ஆகிய தேதிகள் வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் அதன் பிறகு பருவமழை சீசன் முடிந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்