கடந்த 23ஆம் தேதி, பஞ்சாப் மற்றும் உபி காவல்துறையினர் இணைந்து நடத்திய என்கவுண்டரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் ஆயுதம் ஏந்திய வகையில் குருசேவக் சிங் பதிவு செய்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.