உக்ரைனில் இருந்து வந்ததாலும் இந்தியாவில் படிக்க வாய்ப்பு - ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (14:33 IST)
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

 
ரஷ்யா உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடக்கும் போரில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான அரசின் முயற்சிகளை அங்கீகரிக்கும். அதேவேளையில், அவர்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
 
உக்ரைனில் படிப்பு தடைபட்ட நிலையில் இருக்கும் மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காணுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதோடு, இதுதொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு இடைவிடாத ஆதரவை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்