முத்தமிடும்போது எச்சில் மூலம் பரவும் வைரஸ் தொற்று காரணமாக முத்தக் காய்ச்சல் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இந்த முத்தக்காய்ச்சல் ஆன்டிபயாடிக் மருந்துக்களால் குணமடையாது என்றும் குறிப்பாக இந்த முத்தக்காய்ச்சல் டீன் ஏஜ் மற்றும் இளைஞர்களை மட்டுமே பாதித்து வருவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான காய்ச்சல், கழுத்து வலி, அக்குள் உள்பட சில பகுதிகளில் வீக்கம், தொண்டை வறட்சி, தோல்களில் அரிப்பு, தலைவலி ஆகியவை இந்த முத்தக்காய்ச்சலுக்கு அறிகுறி என்றும் இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.