உக்ரைன் - ரஷியா இடையே போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று 2-வது முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 35 நிமிடங்கள் நடந்த உரையாடலின் போது, இந்திய குடிமக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் செய்த உதவிகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், சுமி நகரத்திலிருந்து இந்திய மக்களை வெளியேற்றுவதற்காக நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். உக்ரைனில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.