கமலுக்கு கொரோனா... விரைவில் மீண்டு வர ஸ்டாலின் வாழ்த்து

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (17:49 IST)
தமிழக முதலர் ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
கமலஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
 
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக முதலர் ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் தொற்றிலிருந்து மீண்டு தனது பணிகளை தொடர விழைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்