பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! – நீட் ரத்து பற்றி பேசுவாரா?

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (11:01 IST)
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நேற்று ஏகேஎஸ் விஜயன் அறிவிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக ஏகேஎஸ் விஜயன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி ஆலை அமைத்தல் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்தல் குறித்து வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்