மே 2க்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:24 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 2க்கு பிறகு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளன. இந்நிலையில் மே 2 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின் “தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்
மேலும் “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்