தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

Mahendran

வியாழன், 8 மே 2025 (12:38 IST)
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள தகவல், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
தஞ்சை மாவட்டம் பாபநாசம் என்ற பகுதியில் சேர்ந்த ஆர்த்திகா என்பவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று திடீரென தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக சுடிதார், துப்பட்டாவால்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
 
ஆனால் இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் தேர்ச்சி பெற்றது மட்டும் இல்லாமல் 413 மதிப்பெண் எடுத்திருந்தது. அறிந்ததும், அவரது பெற்றோர்கள் மற்றும் உற்ற உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லாது என்றும், தேர்வு தோல்வி என்பது வாழ்வின் முடிவு அல்ல என்பதை அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்