பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

Mahendran

வியாழன், 8 மே 2025 (13:07 IST)
சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய ஏவுகணை மூலம் இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் அந்த ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து இந்தியா அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானை தாக்கியது என்பதும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.
 
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
இந்த நிலையில், இந்திய தாக்குதலுக்கு பதிலாக சீனாவிடம் இருந்து வாங்கிய  சில ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாகவும், சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இந்த ஏவுகணைகளை இந்தியா இடையிலேயே வழிமறித்து அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனால் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளால் இந்தியாவுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்