அகவிலைப்படி உயர்வு; சம்பள பிடித்தம் கிடையாது! – ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:49 IST)
அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.

மேலும், பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும்.

ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்

பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியதால் போராட்டம் நடத்திய நாட்களை விடுப்பாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை விடுப்பாக அல்லாமல் வேலை நாளாக மாற்றப்படும். இதனால் யாராவது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் பழைய இடங்களில் பணி மாற்றம் செய்யப்படுவர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்