முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லுவோம்..! – அண்ணாமலை நூதன போராட்ட அறிவிப்பு!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:30 IST)
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து வாழ்த்து சொல்லும் போராட்டம் நடத்த பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதிர்த்தி கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “இந்துக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி வரும் அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.விநாயகரை வழிபட தடை விதிப்பது தனிமனித அத்துமீறல் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மற்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூட அனுமதி அளிக்காமல் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், அனைத்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்களும் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து முதல்வர் முகவரிக்கு அஞ்சல் அட்டை அனுப்புமாறு நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்