டங்ஸ்டன் விவகாரத்திற்கு முக்கிய காரணம் அதிமுக எம்பி தம்பிதுரை தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு புகார் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இன்று சட்டமன்றத்தில் பேசிய, அமைச்சர் தங்கம் தென்னரசு தான் முதல்வராக இருக்கும் வரை டங்சன் சுரங்கத்தை அமைக்க விடமாட்டோம் என்று நெஞ்சுரத்துடன் நமது முதல்வர் கூறியுள்ள நிலையில், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்று பார்த்தால், அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை தான் என குறிப்பிட்ட தங்கம் தென்னரசு, அவர்தான் இந்த திட்டத்திற்கு காரணம் என்றும் கூறினார். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக அரசியல் ஆதாயம் செய்வதற்காக டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் குளிர்காய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அரிய வகை கனிம வகைகள் மாநில அரசின் உரிமையை மீறி மத்திய அரசு எடுத்துக் கொண்ட போது, அதை திமுக எம்பி தம்பிதுரை ஆதரித்ததின் விளைவு தான் டங்ஸ்டன் விவகாரமாக வந்திருக்கிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.