அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி: பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு..!

வியாழன், 30 நவம்பர் 2023 (10:19 IST)
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன்  பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறிய போது ’பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன்  நடத்திய பேச்சு வார்த்தையில் அரசு செய்த சாதனைகளை மட்டுமே அமைச்சர் பேசினார்

ஆனால் தனியார் நிறுவனங்களை போல் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர் பேசவில்லை.கர்நாடகாவில் 1.50 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அரசு 60 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. 
 
அதேபோல் குஜராத்தில் 1.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அமுல் நிறுவனம் 75 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. ஆனால் ஆனால், தமிழகத்தில் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியானாலும்,  ஆவின் நிறுவனம் வெறும் 29 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்