33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

சனி, 25 நவம்பர் 2023 (18:57 IST)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ருடால்ப் துவார்த்(33)  மாரடைப்பால் உயிரிழந்தார்.

சமீப காலமாக  உலகம் முழுவதும் இளம் வயதிலேய மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் சமீப காலத்தில் உடற்பயிற்சி செய்து வந்த இளம் வயதினர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்திகள் வெளியானது.

இதுகுறித்து இணையதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ருடால்ப் துவார்த்(33).இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்து வந்தார். இங்கு அவர் பயிற்சி மேற்கொள்ளும்  வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிரபலமாகினார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு,தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்