புதுச்சேரியில் மாஸ்க் கட்டாயம்: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

புதன், 29 நவம்பர் 2023 (10:25 IST)
புதுச்சேரியில் வெளியே வரும் பொதுமக்கள் மாஸ் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற காய்ச்சல் பரவி வருகிறது. இதனை அடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது போல் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாகவும் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்