எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (17:54 IST)
தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "எருமை மாடாடா, நீ? பேப்பர் எங்கே?" என்று ஒருமையில் திட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் சார்பில் இன்று கண்காட்சி தொடங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, தமிழக வேளாண் மன்றம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், விழாவில் அமைச்சர் பேச தொடங்கும் போது, தனது உதவியாளரை நோக்கி "பரசுராமன் எங்கே?" என்று கேட்டார். அப்போது, அவரது உதவியாளர் அருகே வந்தபோது, "எருமை மாடு, பேப்பர் எங்கே?" என்று கேட்டார்.

உதவியாளர் அந்த பேப்பரை கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அந்த பேப்பரை அவரிடம் தூக்கி போட்டு விட்டுச் சென்ற அமைச்சர், தொடர்ந்து பேச தொடங்கினார்.

தனது உதவியாளரை "எருமை மாடு" என்று திட்டிய அமைச்சரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அமைச்சருக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்