இந்த தீபாவளி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டல தான்: அமைச்சர் தடாலடி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:45 IST)
தனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
வரும் 6 ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு 5ந் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்திருக்கிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மக்கள் பலர் சொந்த ஊர் செல்விருக்கின்றனர்.
 
இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை விட அரசு திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் சிரமமின்றி செல்ல எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.
 
மேலும் தனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தான் என்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்