பாடல் படப்பிடிப்பில் காயம் அடைந்த கத்ரீனா கைப்!

வெள்ளி, 2 நவம்பர் 2018 (11:22 IST)
யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்ர் 8ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் அமீர் கான், கத்ரீனா கைஃப், அமிதாப் பச்சன்,  பாத்திமா சனா சேக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
அமீர் கான் 'பிராங்கி' எனும் கதாபாத்திரத்தில் ஆங்கில அரசு அதிகாரியாக நடித்துள்ளார். 'சுரய்யா' எனும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் கத்ரீனா  நடித்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா நடனக் கலை அமைத்துள்ளார். 
 
நூரே ஏ குதா என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட நடனகலைஞர்கள் இதில் நடனமாடியுள்ளனர். பாடலுக்கென கடினமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கத்ரீனா.
இதுகுறித்து பேசிய கத்ரீனா, நடனத்தை பயிற்சி செய்யும் போது முட்டியில் அடிபடாமல் இருப்பதற்காக பேட் அணிந்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பின் போது அணிய முடியாத காரணத்தால் சிரமம் ஏற்பட்டதாகவும், காயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையே 'தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' திரைப்படம் இந்தியா முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்