12 வயதுக்குட்பட்டவர்கள் சர்கார் படம் பார்க்ககூடாது –சென்ஸார் குழு முடிவு

வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:45 IST)
சர்கார் படத்தை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தனியாகப் பார்க்ககூடாது என அந்நாட்டின் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி, பழ.கருப்பையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது.

கதை திருட்டு சர்ச்சை விவகாரங்கள் எல்லாம் முடிக்கப்பட்டு ஒருவழியாக சர்கார் தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. அதனால் தமிழ்ப் படங்கள் இதுவரை ரிலிஸாகாத நாடுகளில் கூட படத்தை ரிலீஸ் செய்கிறது. ஒட்டுமொத்தமாக சர்கார் திரைப்பரம் உலகம் முழுவது 80 நாடுகளில் 3000 திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை 12 வயதுக்கு குறைவானவர்கள் தனியாகப் பார்க்கக்கூடாது என இங்கிலாந்து தனிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அப்படி பார்க்க விரும்புவோர் பெற்றோர் அல்லது பெரியவர்களுடன் சேர்ந்தே பார்க்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. சர்கார் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை, மற்றும் வலுவான அரசியல் உரையாடல்கள் உள்ள்தே இதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் வெளியாகும் படத்தின் நீளம் 163 நிமிடங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்