தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது: அமைச்சர் அன்பில் மகேஷ்

Mahendran
புதன், 28 ஆகஸ்ட் 2024 (12:03 IST)
நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை விடுவிக்கவில்லை என்றும், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு  ஏற்றுக்கொள்ளாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
 
கல்வி என்பது பல லட்சம் மாணவ மாணவர்களை சார்ந்த விஷயம்,  இதில் அரசியல் செய்யக்கூடாது என்று நேரடியாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசும்  பார்க்கிறோம். சொல்கிறோம் என்று சொன்னாலும், அதுபற்றி எதுவுமே சொல்லவில்லை, செய்யவில்லை. இருந்தாலும் துறை சார்பாக பல்வேறு முறை கடிதங்கள் எழுதி இருக்கிறோம். அதற்கும் உரிய பதில்கள் வரவில்லை.
 
573 கோடி மட்டுமல்ல கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.249 கோடியையும் நிறுத்திவிட்டார்கள். தேசிய கொள்கைக்கு வந்தால் தான் நிதி தருவேன் என்று சொல்கிறார்கள். 
 
மேலும் மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும், ஆசிரியர்கள் சம்பளம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்