தனியாருக்கு தாவிய அரசு பள்ளியினர்: அன்பில் மகேஷ் கொடுத்த புள்ளி விவரம்

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:30 IST)
15 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் வருமானம் குறைந்ததால், பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
அதாவது நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், இதே போல் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை கடந்த ஆண்டு 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்