பாலியல் தொல்லையை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி !!
ஞாயிறு, 18 ஜூலை 2021 (12:24 IST)
பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சமீபத்தில் ஆசியர்கள் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழகத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் இது குறித்து நடவடிக்கைகளை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முன் வந்தது.
இதனிடயே தற்போது பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.