நாளை பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணை!

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (20:30 IST)
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி நீர்மட்டத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 100 அடி நீர்மட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது. 
 
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளது. நாளை காலை பத்து மணிக்கு முதல்வர் அணையை திறக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்