100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

செவ்வாய், 17 ஜூலை 2018 (20:20 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு 100 அடி நீர்மட்டத்தை எட்டியது. 
 
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.   
 
வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டுர் அணை 100 அடியை எட்டுவது இது 64 வது முறையாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்