மெட்ரோவில் இலவச பயணம்; குவித்த மக்கள்; கட்டணம் குறைய வாய்ப்பு; மெட்ரோ இயக்குநர்

Webdunia
வியாழன், 31 மே 2018 (17:40 IST)
மெட்ரோ ரயிலில் இலவச பயணிக்க அனுமதித்தபோது மக்கள் அதிகளவில் பயணித்ததால் டிக்கெட் கட்டணத்தை குறைக்க ஆலோசனை நடத்த உள்ளோம் என்று மெட்ரோ ரயில் இயக்குநர் நரசிம்ம பிரசாத் தெரிவித்துள்ளார்.

 
சென்னை மெட்ரோ ரயில் இயங்க ஆரம்பித்தது முதல் தற்போது வரை அதிகளவில் மக்கள் அதில் பயணம் செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் டிக்கெட் கட்டணம் சற்று அதிகம். ஆனால் எல்லா பகுதிக்கும் செல்லும் வாய்ப்பு இல்லை. இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
 
கோயமபேடு - ஆலந்தூர் இடையே முதலில் தொடங்க சேவை பின்னர் பரங்கிமலை, திருமங்கலம் - நேரு பூங்கா, சின்னமலை - விமான நிலையம் என்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 
 
கடந்த 25ஆம் தேதி நேரு பூங்கா - செண்ட்ரல், சின்னமலை - தேனாம்பேட்டை இடையே சேவை தொடங்கப்பட்டது. 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
 
அதில் சுமார் லட்சக் கணக்கில் மக்கள் பயணம் செய்துள்ளனர். இதை வைத்து மெட்ரோ ரயிலுக்கு மக்களிடத்தில் ஆதரவு உள்ளது என்பது மெட்ரோ நிறுவாகம் உறுதி செய்துள்ளது.
 
இதுகுறித்து மெட்ரோ ரயில் இயக்குநர் நரசிம்ம பிரசாத் கூறியதாவது:-
 
இந்த இலவச சேவை மூலம் மக்கள் மெட்ரோ ரயிலுக்கு ஆதரவு தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைய உரிய அதிகாரம் கொண்ட அமைப்புடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன்பிறகு இதுகுறித்த அறிவுப்புகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்