11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் - 4 மணி நிலவரம் என்ன?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (16:37 IST)
தமிழ்நாட்டில் 50,000 முகாம்களில் இன்று 11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 

 
தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மெகா தடுப்பூசி மையம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தடுப்பூசியை மையங்கள் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தடுப்பு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று மீண்டும் தடுப்பூசி மையம் செயல்பட்டது. 
 
இதனிடையே தமிழ்நாட்டில் 50,000 முகாம்களில் இன்று 11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மணி நேரம் 11வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் செயல்படும் நிலையில் இன்று மாலை 4.15 மணி நிலவரப்படி 8,82,333 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்