தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழக மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிடுகிடுவென விலை உயர்ந்தது. இந்நிலையில் இதை சமாளிக்க அரசு பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளியை மக்களுக்கு வழங்கி வருகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி “மகாராஷ்டிரா உள்ளிட்ட மழை பொழிவு அதிகமில்லாத மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தக்காளியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் உள்ள முக்கியமான ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.