பிரதமர் மோடிக்கு துணை நிற்க வந்த கமலா ஹாரிஸ்! – பாஜகவினர் போஸ்டர் வைரல்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (09:21 IST)
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸுக்கு பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று விரைவில் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நாள் தொடர்ந்து தமிழகத்தில் அவர் குறித்த பேச்சு அதிகமாக இருந்தது. அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தில் அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தற்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரனில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் “55 வருடம் ஊழலில் சிக்கி தவித்த இந்தியாவை மீட்டெடுத்த பாரத பிரதமர் மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கைக்கு துணை நிற்க அமெரிக்க துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ் அவர்களை வாழ்த்துகிறோம்” என வாசகங்கள் உள்ளன.

மேலும், ”பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த உலகை ஆளப்போகும் பாரதி கண்ட பெண்ணே வாழ்க” என வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்